TAMIL CINEMA

Tuesday, January 26, 2016

விஜய் படத்தில் போக்கிரி நண்பன்

    விஜய் படத்தில் போக்கிரி நண்பன்


விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தில் அவருடைய நண்பராக நடித்திருப்பவர் ஸ்ரீமன். இவர் ‘போக்கிரி’ மட்டுமல்லாது ‘நிலாவே வா’, ‘நெஞ்சினிலே’, ‘சுறா’, ‘வில்லு’ என விஜய் நடித்த பல படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக விஜய் படங்களில் தலைகாட்டாமல் இருந்த ஸ்ரீமன் தற்போது மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 60-வது படமாக உருவாகவுள்ள பரதன் இயக்கும் புதிய படத்தில் ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இன்னும் ஒருசில தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏப்ரலுக்கு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாரை தப்பட்டை – திரை விமர்சனம்

                       தாரை தப்பட்டை – திரை விமர்சனம்


தஞ்சாவூரில் கரகாட்ட குழு நடத்தி வருகிறார் சசி குமார். இந்த குழுவில் நடனமாடி வருகிறார் வரலட்சுமி. இவர் சசிகுமாரை காதலித்து வருகிறார். ஆனால், சசிகுமாரோ வரலட்சுமி மேல் காதல் இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார்.

வரலட்சுமியின் ஆட்டத்தால் சசிக்குமாரின் கரகாட்ட குழுவிற்கு பல வாய்ப்புகள் வருகிறது. இந்நிலையில் உதவி கலெக்டருக்கு டிரைவராக இருக்கும் சுரேஷ், வரலட்சுமியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக வரலட்சுமியின் அம்மாவிடம் கூறுகிறார்.

இதையறியும் வரலட்சுமியின் அம்மா, தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென நினைத்து, சசிகுமாரை விட்டுக்கொடுக்கச் சொல்லுகிறார்.

அவரும் வேறு வழியில்லாமல், வரலட்சுமியை வெறுப்பதுபோல் விரட்டியடித்து, ஆர்.கே. சுரேஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரலட்சுமியிடம் சத்தியமும் வாங்குகிறார்.

பின்னர், வரலட்சுமிக்கும், ஆர்.கே. சுரேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சசிக்குமாரின் கரகாட்டக் குழு பொருளாதார நெருக்கடியில் சிக்குகிறது. மேலும் திருமணமாகி போன வரலட்சுமியும் எங்கு வசிக்கிறாள் என்று தெரியாத நிலை ஏற்படுகிறது.

இறுதியில், சசிக்குமார் கரகாட்ட குழுவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டாரா? வரலட்சுமிக்கு என்ன ஆனது? அவரை தேடி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சன்னாசியாக நடித்திருக்கும் சசிக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து மிக இயல்பாக நடித்திருக்கிறார். இவர்தான் கதாநாயகன் என்றாலும், இவரையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி.

சூறாவளி என்னும் கதாபாத்திரத்தில் சசிக்குமாரை விரட்டி விரட்டி காதலிப்பது, தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபப்பட்டு அடித்து நொறுக்குவது என சூறாவளியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்திருக்கிறார். வரலட்சுமியின் நடிப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

ஸ்டுடியோ 9 தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். பாலா படங்களில் வில்லன்கள் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும்.

அதுபோல், சுரேஷின் கதாபாத்திரமும் பேசும் படமாக அமைந்திருக்கிறது. சுரேஷ் மீது வெறுப்பு வரும் அளவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சசிகுமாரின் அப்பாவாக வரும் ஜி.எம்.குமார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் வலியையும் மையப்படுத்தி இயக்குனர் பாலா ஒரு கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் செல்லும் அனைவருக்குமே இப்படம் மிகப்பெரிய ஏமாற்றம்.

யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடிய ஒரு கதையை, நாட்டுப்புறக் கலைஞர்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் பாலா. இது பாலாவின் வழக்கமான படங்கள் வரிசையில் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள், பின்னணி இசையை அவருக்கே உரிய பாணியில் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். செழியனின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.


மொத்தத்தில் ‘தாரை தப்பட்டை’ சிறப்பு.

ஹாலிவுட்டில் மந்திரவாதியாக நடிக்கும் தனுஷ்

  ஹாலிவுட்டில் மந்திரவாதியாக நடிக்கும் தனுஷ்

ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான தனுஷுக்கு, ஹாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்திய நடிகர்களில் இர்பான் கான், அனில் கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஓம் பூரி, சோனு சூத் போன்ற நடிகர்களுக்கு பிறகு தனுஷும் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

ஈரானிய-பிரெஞ்ச் இயக்குனரான மரியான் சத்ராபி இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மரியான் சத்ராபி ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் ‘பெர்சிபொலிஸ்’ என்ற படத்தை இயக்கியவர்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் சான் ஆண்ட்ரியாஸ் படத்தின் நாயகி அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஆங்கில காமிக் நாவலை தழுவி இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ் இந்திய மந்திரவாதியாக நடிக்கிறாராம்.


இப்படத்தின் படப்பிடிப்புகளை இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ ஆகிய நாடுகளில் படமாக்கவுள்ளனர். இந்த வருடத்தின் இடையில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் உலகப் போர் – திரை விமர்சனம்

        மூன்றாம் உலகப் போர் – திரை விமர்சனம்
இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார்.


அந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகனுடன் 100 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைத்து அனுப்புகின்றனர்.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 வீரர்களும் திடீரென தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனா தளபதிகளுக்கு மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிந்திருக்கக்கூடம் என்று நினைத்து அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர்.

அப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கஸ்டடியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் 100 வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாக டார்ச்சர் செய்து விசாரிக்கிறார்கள்.

இறுதியில், அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் சுனில் குமாருக்கு தெரிந்ததா? அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள்? சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுனில்குமார் இந்திய ராணுவ மேஜருக்குண்டான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார்.

படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் துப்பாக்கி கையுமாகவே அலைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ரொம்பவும் தெளிவு இல்லாமலே நடித்திருக்கிறார்.

அகிலா கிஷோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சீனா தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் ஹீரோவுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2025-ல் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே உலகப்போர் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை படமாக்கியிருக்கிறார்.

ஆனால், 2025-ம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

வேத் சங்கரின் இசை காதுகளுக்கு இரைச்சலாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான்.

அமெரிக்காவில் கபாலி புதிய சாதனை

அமெரிக்காவில் கபாலி புதிய சாதனை
மலரட்டும் மனிதநேயம்’ என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் நேற்று நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் தாணு பேசும்போது, நான் 1980ல் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்டேன். இப்போது ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை தயாரித்து வருகிறேன். எந்தப் படமும் இல்லாத சாதனையாக அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் ரூ.8.5 கோடி வியாபாரமாகியிருக்கிறது.

வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை ரூ. 8.5 கோடி வியாபாரமாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. யாருக்குமே இதுவரை வியாபாரம் ரூ.2.5 கோடியைத் தாண்டவில்லை என்று கூறினார்.


மேலும் அவர்கூறும்போது, சென்னை மழை வெள்ளத்தின்போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தங்க இடம், உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இதுபோல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன் என்றார்.
google98dbb8b5f3166a6a.htmlhttps://pushpad.xyz/projects/122/subscription/edithttp://latesttamilcinemakollywoodnews.blogspot.in/